முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் : சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
P R Kawai 2025-05-19

Source: provided

புதுடெல்லி : அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட் நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதில் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன என கூறி, அது மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நீதிபதிகள் ஓய்வு பெறும்போது, அவர்கள் நிரந்தர அல்லது கூடுதல் நீதிபதிகள் என்ற அளவில் வேற்றுமை காணப்படுகின்றன.

இதேபோன்று, மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஐகோர்ட் நீதிபதியானவர்களுக்கு, பார் மூலம் நேரடியாக ஐகோர்ட் நீதிபதியானவர்களை விட குறைவான ஓய்வூதியம் கிடைக்கப்பெறுகிறது என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசீ தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை மேற்கொண்டது. அப்போது நீதிபதி அமர்வு கூறும்போது, கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களை பெற தகுதியானவர்கள் என நேற்று பிறப்பித்த முக்கிய உத்தரவில் தெரிவித்து உள்ளது.

அவர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் கூடுதல் நீதிபதிகளாக ஓய்வு பெற்றனரா? அல்லது பிற்காலத்தில் நிரந்தரம் செய்யப்பட்டனரா? என்றில்லாமல் அனைவருக்கும் முழு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனை மறுப்பது என்பது, அரசியல் சாசனத்தின் பிரிவு 14-ன் கீழ் அனைவருக்கும் உள்ள உரிமையை மீறும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள். எனினும் விரிவான தீர்ப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. தீர்ப்பு ஜனவரி 28-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து