முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 8 பேர் பலி : ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

மகாராஷ்டிரா : மகாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர் பலியாகினர். அதில் ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர். தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து