முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 3 அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

திங்கட்கிழமை, 19 மே 2025      விளையாட்டு
0

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

குஜராத் முன்னேற்றம்...

ஐ.பி.எல். தொடரில் டில்லியில் நடைபெற்ற  போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே விக்கெட் இழப்பின்றி எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், ஷுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் டில்லி கேபிடல்ஸை வீழ்த்தியதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

4-வது இடம் யாருக்கு?

டில்லிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், 4-வது மற்றும் கடைசி இடத்துக்கான போட்டி நிலவுகிறது. 4-வது இடத்துக்கான போட்டியில் டில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளும், 12 போட்டிகளில் விளையாடியுள்ள டில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளும், 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன.

மூன்று அணிகள்...

பிளே ஆப் சுற்றுக்கு 4-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்குள் நிலவுகிறது. பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறப் போகும் நான்காவது அணி யார் என்பது இன்னும் ஒரு சில போட்டிகள் நிறைவடைந்தவுடன் தெரிந்து விடும்.  சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து