முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர துணை நிற்போம் : தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
DCM-1-2025-05-25

Source: provided

திருச்சி : திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணியின்  ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் மற்றும் அஞ்சலி. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன்,  ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த தி.மு.க. தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே கேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளுக்கும் கண்டம்.

‘மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை வழங்குவோம்’ என்ற ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு.

இந்திய ஒன்றியத்திலேயே ‘நம்பர்-1’ மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்து வரும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதி.மு.க. முன்னாள் நிர்வாகி உட்பட 9 பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு.

தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர செயலாளர் தலைமையிலான இளைஞர் அணி எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று இந்தக் கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து