முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஏஸ்’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 26 மே 2025      சினிமா
Ace-Screen-Review 2025-05-2

Source: provided

சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார். யோகி பாபு வீட்டில் தங்குபவர், அவர் மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் ருக்மணி வசந்துடன் நட்பு ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறுகிறது. 

இதற்கிடையே ருக்மணிக்கு பணம் தேவை ஏற்படுகிறது. அதனால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். ஒரு வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார். அவரது திட்டம் ஜெயித்ததா?, அதன் மூலம் அவர் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார், அதில் இருந்து எப்படி மீள்கிறார்?, என்பதை கமர்ஷியலமாகவும், மாஸாகவும் சொல்லி இருக்கிறார படம் தான் ‘ஏஸ்’ திரை படம்

வில்லன்களாக நடித்திருக்கும் பப்ளு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியா லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார். காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. படம் முழுவதும் வரும் யோகி பாபு, வரும் காட்சிகள் ஒருசிலது சோடை போனாலும், பெரும்பாலான காட்சிகளில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மொத்தத்தில் இந்த, ஏஸ், திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து