முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தக்லைப்' பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி: கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் '' என கர்நாடக அரசுக்கு சுப்ரிம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசனும், மணிரத்னமும் சேர்ந்து தயாரித்த தக் லைப் திரைப்படம், ஜூன் 5-ம் தேதி வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம்' என்றார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும். திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். அது உங்கள் கடமை. தியேட்டருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது. கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என கர்நாடக அரசுக்கு சுப்ரிம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து