முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
CM-2-2025-06-20

சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? முடிவுற்ற பணிகள் எத்தனை? அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார். இத்துடன் பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், அனிதா ராதாகிருஷ் ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை வாரியான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து