முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு 68 பயணிகளுடன் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி மீண்டும் சென்னைக்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து