முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகள் சமமாக நிற்பதை பா.ஜ. விரும்பவில்லை: ராகுல்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

 புதுடில்லி : ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, 'நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும். அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை. மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன். நம் மொழிகள் இன்றி, நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது; தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம் எனத் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆங்கிலம் தடையல்ல, அது அனைவரையும் இணைக்கும் பாலம். ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல. அனைவருக்கும் அதிகாரம் அளிப்பது. ஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவி.

ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை. இதனால், ஏழைகள் ஆங்கிலம் கற்பதை அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஆன்மா, கலாசாரம் மற்றும் அறிவு உள்ளது. அவற்றை நாம் போற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டி போடவும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பற்கான இந்தியாவை உருவாக்க இதுவே பாதை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து