முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரெளபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிறந்தநாள் கொண்டாடும் திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- "ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும், தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து