முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார்: ரிஷப் பந்த் தகவல்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

லீட்ஸ் மைதானத்தில்... 

இன்று லீட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ரோஹித்தும், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது.

கில் 4-வது இடத்தில்...

இந்நிலையில், இந்தத் தொடரில் முதல் போட்டி குறித்து ரிஷப் பந்த் கூறும்போது, “அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. ஆனால், 4 மற்றும் 5-வது இடத்தில் விளையாடுவது யார் என்பது உறுதியாகி உள்ளது. ஷுப்மன் கில் 4-வது இடத்திலும், நான் 5-வது இடத்திலும் விளையாட உள்ளோம். மற்றவை குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்.  

ஆழமான புரிதல்... 

எனக்கும், ஷுப்மன் கில்லுக்கும் இடையே ஆழமான புரிதல் உள்ளது. அதற்கு காரணம் எங்களது நட்பு. நிச்சயம் அது களத்தில் சிறந்த முடிவை எடுக்க உதவும்” என்றார். 4-வது பேட்ஸ்மேனாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,564 ரன்களை எடுத்துள்ளார் கோலி. அந்த இடத்தில்தான் கில் விளையாடுகிறார். இது அவரது பொறுப்புகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து