முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாயை போல தூக்கி எறிய வேண்டும்: பெண் பத்திரிகையாளரை விமர்சித்த அதிபர் ட்ரம்ப்..!

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: பெண் பத்திரிக்கையாளரை கடுமையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தார்.

அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும் என்ற வகையில் தெரிவித்து இருந்தது இந்த தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், ட்ரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். அவர் ட்ரூத் சோசியலில் வெளியிட்ட செய்தியில், இது பொய்யான செய்தி. அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்து உள்ளன. ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என பதிவிட்டார். இந்த சூழலில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், சி.என்.என்.னில் இருந்து நடாஷா பெர்டிராண்டை நீக்க வேண்டும். 3 நாட்களாக பொய்யான செய்திகளை பரப்பும் அவரை நான் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.

அவரை உடனடியாக கண்டிக்க வேண்டும். அதன்பின்னர், ஒரு நாயை போன்று தூக்கி எறிய வேண்டும். லேப்டாப்பை திறந்ததும் பொய் செய்தியையே பரப்பும் வேலையில் ஈடுபடுகிறார். அணு உலைகள் பற்றிய பொய்யான புனைவுகளை வெளியிடுகிறார். நம்முடைய பேட்ரியாட் விமானிகள் உண்மையில் சிறந்த பணியை செய்துள்ளனர். முற்றிலும் அழிவுக்கான வேலையை செய்து விட்டனர். ஆனால், அவர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். பொய் செய்தியை வெளியிடும் சி.என்.என்.னில் அவரை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என ஆவேசத்துடன் பதிவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து