முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி - 7 பேர் காயம்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Accident-1

Source: provided

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் நேற்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர்.

ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள் கொண்ட பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் எஞ்சியோரஒ தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்கின்றன. காவல்துறை தலைமையக செய்தித் தொடர்பாளர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே வெளியிட்ட அறிக்கையில், ‘பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோல்திர் பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

மீட்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் தீவிரமான மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. இருப்பினும் ஆற்றின் வேகமான நீரோட்டம் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து