முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த எஸ்.ஐ., காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.7 - பணியின் போது அகால மரணமடைந்த மூன்று எஸ்.ஐ. மற்றும் 4 காவலர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி செய்ய உத்திரவிட்டுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை  பிரிவில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த செல்வராஜ் 23.11.2012 அன்று சுப்பிரமணியபுரம் அருகே,  புதுக்கோட்டை  திருச்சிராப்பள்ளி பிரதான சாலையில்  ஏற்பட்ட  சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.11.2012 அன்று காலமானார்  என்ற செய்தியையும்; 

நீnullலகிரி மாவட்டம், உதகமண்டலம் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த  சிவக்குமார்   உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 25.11.2012 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

சென்னை, காவல் துறை இயக்குநர் அலுவலகம்,  “ண”  பிரிவு,  குற்றப்  புலனாய்வுத் துறையில்  உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த திருநாவுக்கரசு அவர்கள் சென்னை, ராஜகீழ்பாக்கத்தில் 28.12.2011 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  26.11.2012 அன்று  காலமானார்  என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாநகர  போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு கட்டுப்பாட்டு அறையில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த  ரவிச்சந்திரன் அவர்கள் 29.11.2012 அன்று  மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த  சபாபதி 30.11.2012 அன்று  தனது இரு சக்கர வாகனத்தில் திருப்புவனம்  வட்டம், நெல்முடிகரை கிராமம், மருதமரம் என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஏற்பட்ட சாலை விபத்தில்  பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணி புரிந்து வந்த  சந்தோஷ்குமார் 1.12.2012 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை பெருநகர காவல், திருநின்றவூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த ரமேஷ்குமார் அவர்கள் 3.12.2012 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிக்க  துயரம் அடைந்தேன்.

காவல் துறை உதவி ஆய்வாளர்கள்  திருநாவுக்கரசு மற்றும் சபாபதி,  சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ் மற்றும் ரவிச்சந்திரன்,  தலைமைக் காவலர்  சிவக்குமார், முதல்நிலைக் காவலர் ரமேஷ்குமார் மற்றும் காவலர்  சந்தோஷ்குமார் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலை விபத்துகளில்    காலமான உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு,  சபாபதி,    சிறப்பு உதவி ஆய்வாளர்   செல்வராஜ் மற்றும்  காவலர்  சந்தோஷ்குமார், மாரடைப்பால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் முதல்நிலைக் காவலர்  ரமேஷ்குமார்,    உடல்நலக் குறைவால் காலமான தலைமைக் காவலர் சிவக்குமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்