முக்கிய செய்திகள்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் கைது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
indian-maoists

 

ஜக்தல்பூர்,பிப்.22 - சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் 2 மாவோயிஸ்டுகள் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் நக்சலைட்டின் முகாம் ஒன்றும் போலீஸ் ரோந்து படையால் அழிக்கப்பட்டது. 

தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுண்டருக்கு பிறகு இவை அனைத்தும் நடந்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். அந்த முகாமில் இருந்து போலீசார் டெட்டனேட்டர்கள், வெடிமருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மற்றொரு இடத்திலும் இதுபோல் என்கவுண்டர் நடந்தது. ஆனால் அதன் முடிவு என்ன என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: