முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு நிலம் ஆக்கிரமிப்பு - திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் பிப் 22 - ரூ 1 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அதில் இருந்து 500 மேற்பட்ட பனை மரங்களை வெட்டியதாக ராமநாதபுரம் ஒன்றிய திமுக செயலாளர் மீது புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள ரெகுநாதபுரம். இந்த ஊரில் ராமநாதபுரம் ஒன்றிய திமுக செயலாளர் நாகுவுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் நிலத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தையும் அவர் கையகப்படுத்தி அதில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பனை மரங்களை 

வெட்டியுள்ளார். வெட்டப்பட்ட பனை மரங்களை இரவு நேரங்களில் டிரேக்டர்கள் மூலம் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் ஆளும் காட்டி நன்றிய செயலாளராக அவர் இருப்பதால் நடவடிக்கை எடுக்கவவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் சுப. தங்க வேலனுக்கு  வேண்டியவர் என்பதால் அதிகாரிகள் கண்டு  கொள்ளவில்லை என்னும் கூறப்படுகிறது.

அந்த பகுதியில் 1 சென்ட் நிலம் ரூ 15 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது என்றும் 7.5 ஏக்கர் நிலம் சுமார் 1 கோடி மதிப்புடையது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து ரெகுநாதபுரத்தை சேர்ந்த நாகநாதன் என்பவர் கூறகையில் திமுக ஒன்றிய செயலாளர் நாகு இங்குள்ள 7.5 ஏக்கர் இலத்தை ஆக்கிரமித்து அதில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பலன் தரும் பனை மரங்களை வெட்டிச்சாய்த்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து அந்த சொத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றார்.

இது குறித்து முன்னால் ஊராட்சி தலைவர் பாண்டி கூறுகையில் திமுக ஒன்றிய செயலாளர் நாகுவுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகில் உள்ள 

ரூ 1 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி அதில் இருந்த 500 மேற்பட்ட பனை மரங்களை வெட்டியுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் கொடுத்தும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்றார் .

இது குறித்து ரெகுநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறிகையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதாலும் அமைச்சர் சுப. தங்க வேலனுக்கு வேண்டியவர் என்பதாலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.

தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மீது நில ஆக்கிரமிப்பு புகார்கள் எழுந்துள்ள நிலையில் ராமநாதபுரம் ஒன்றிய திமுக செயலாளர் மீதும் நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்