முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்குள் தீவிரவாதி ஊடுருவல் இருக்காது: நவாஸ்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர்,மே.15 - பாகிஸ்தானில் புதிய பிரதமராகும் நவாஸ் செரீப் இந்தியாவுக்குள் இனி வருங்காலத்தில் பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்காது என்று உறுதி அளித்தார்.  நவாஸ்செரீப் இந்திய பத்திரிகை ஒன்றிற்கு லாகூரில் இருந்தபடியே டெலிபோனில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தற்போது பாகிஸ்தானில் பொருளாதாரம்தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனவே நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வருவதற்கு நான் முக்கியத்வம் அளிப்பேன். பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்படுத்தப்படவேண்டும். தற்போது நான் மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.ஏனெனில்  இந்த தடவை நான் ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.

தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது. தீவிர வாதம் பர்வேஸ் முஷாரப் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்டது. முஸாரப்பின்அரசியல் கொள்கைகளால் தான் தீவிரவாதம் வெளிப்பட்டது. சர்வாதிகாரியான அவர் தான் பாகிஸ்தானில் தீவிரவாதத்தை துவக்கியும் வளர்த்தும் வந்தவர். 

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இனி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ அனுமதிக்கமாட்டேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுடன் எப்போதும் நட்புறவோடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.இனியும் ஒரு கார்கில் போர் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.மும்பையில் ந்டந்ததுபோல் தீவிரவாத தாக்குதல்கள் இனி நடைபெறாது. ஏனெனில் இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம் என்பது தொழில் ரீதியான அமைப்புத்தான். இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு ராணுவம் தடையாக இருக்காது.முஷராப் ராணுவ தளபதியாக இருந்தபோது அவரே தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்தார். இதனால் பல பிரச்சினைகள் உருவானது. காஷ்மீர் பிரச்சினை, லாகூர் பிரகடனம் போன்ற முக்கிய பிரச்சினைகளை சீராக்குவதில் உறுதியுடன் இருக்கிறேன், மேலும் மிக அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு தருவேன். அதன் மூலம் இருநாடுகளுக்கும்  இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தம் ஏற்பட பாடுபடுவேன். அதை காத்திருந்து கவனியுங்கள். பிரதமர் மன்மோகன் சிங்கும் என்னுடன் தொலைபேசியில் பேசினார். வாழ்த்து தெரிவித்த அவர் இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவரை சந்திக்க ஆவலாய் உள்ளேன். இருவரும் சந்தித்து தெற்கு ஆசியாவில் அமைதியும் வளமும் ஏற்பட பாடுபடுவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்