முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன உளவாளி தரம் சாலாவில் கைது

வியாழக்கிழமை, 23 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.24 - சீன உளவாளி ஒருவரை தரம்சாலாவில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் திபெத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது பெயர் பெமா செரிங். இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுபற்றி போலீஸ் எஸ்.பி. கங்ரா பல்பீர் தாகூர் கூறியகாவது:

திபெத் பாதுகாப்பு ஏஜென்ஸி எழுத்து மூலமாக அளித்த தகவலை அடுத்து இவரது சந்தேக நடவடிக்கையைக் கண்காணித்து வந்தோம். அதன்பிறகு இவரை கைது செய்துள்ளோம்.  2009-ம் ஆண்டு நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ள இவர் டெல்லியில் சில ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தான் இவர் தரம்சாலா வந்திருக்கிறார்.

திபெத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கையின்படி இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு சீனாவிலுள்ள மக்கள் விடுதலை படை உறுப்பினராக இருந்துள்ளார். அவரிடமிருந்து இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை  பறிமுதல் செய்துள்ளோம். இந்த இரு ஆவணங்களும், டெல்லியிலுள்ள சந்தினி சவுக் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்த இரு ஆவணங்களையும் எப்படி வாங்கினார் என்பது பற்றியும்,   

அவரிடமிருந்து பறிமுதல் செய்த ஆவணங்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். 

அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில்  அவர் சீனாவிலுள்ள மக்கள் விடுதலை படையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.இவருக்கு வெளிநாட்டில், குறிப்பாக சீனாவில் தொடர்பு உள்ளதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார் என்றார் தாகூர். மக்தள் விடுதலை படையை சேர்ந்த ஒருவரை போலீஸஸார் கைது கைது செய்துள்ளனர். இது 2-வது சம்பவமாகும். அவரை கைது செய்த சமயத்தில் அவர் சீனாவிலுள்ள லகாஸா என்ற இடத்தில் உள்ள அதிகாரிகளுடன் இவர் தொடர்பு வைத்திருந்தபோது பிடிபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்