முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஜூலை.3 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், அந்த பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்காத ஐக்கிய முற்போக்கு கூட்டணியான மத்திய அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கழகம் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை கழக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி மேயருமான சசிகலா புஷ்பா தலைமையில் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தலைமை கொறடாவும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் ரத்தினவேல் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் பரஞ்சோதி, என்.ஆர்.சிவபதி இந்திராகாந்தி, மேயர் ஜெயா, மாநகர துணை மேயர் ஆசிக் மீரா, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேயர் சசிகலா புஷ்பா, எம்.எல்.ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாநகர அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன், கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், ஞானசேகர், லதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், முத்துலெட்சுமி, ஏ.பி. கிருஷ்ணமூர்த்தி, நத்தர்ஷா, சுதாகர், நாட்டாமை சண்முகம், மகாலெட்சுமி மலையப்பன், டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், மயில் ராஜ்மோகன், பாஸ்கர், பத்மநாபன், ஒன்றிய பெருந்தலைவர்கள் முத்துக்கருப்பன், அழகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூர் கண்ணதாசன், nullபதி, பொதுக்குழு உறுப்பினர்கள், டி.என்.சிவகுமார், சாத்தனூர் ராமலிங்கம், வெல்லமண்டி பெருமாள், அண்டகுண்டான் அப்பாக்குட்டி, தென்னூர் குலாம் அலி, சோமு, பாத்திமா அப்பாக்குட்டி, கல்நாயக் சதீஷ், வட்ட செயலாளர்கள் எடத்தெரு பாபு, சந்திரன், வெல்லமண்டி கண்ணியப்பன், என்ஜீனியர் முருகானந்தம். 

முன்னாள் மாவட்ட செயலாளர் கே.கே.பாலசுப்பிரமணியம், சுப்பு, பிரின்ஸ் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.ராவணன், நடேசன், இளைஞர் பாசறை செயலாளர்கள் ஏர்போர் விஜி, அருண் செந்தில்ராம், கே.கே.நகர் கார்த்திகேயன் உட்பட திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 பேர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்