முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்யும்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 5 - தென்மேற்கு பருவமழையினால் பயன்அடையும் மாநிலங்கள் அதிகம். வடகிழக்கு பருவமழையினால் அதிக பயன்அடையும் மாநிலம் தமிழ்நாடு. ஆனால் தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு அதிக பயன் இருக்காது. ஓரளவுக்குதான் மழை பெய்யும்.

தற்போது தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்துவருகிறது. இந்த பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை நீடிக்கும்.

தமிழ்நாட்டில் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுவரை சராசரியாக 5 செ.மீ. மழைக்கு பதிலாக 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 50.9 மில்லிமீட்டருக்கு பதிலாக 63 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 24 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

கோவையில் 4 செ.மீ. மழைக்கு பதிலாக 31 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதான் இந்த வருட தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுவரை பெய்த அதிக மழையாகும். நீலகிரியில் 20 செ.மீ.க்கு பதிலாக 35 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தேனியில் 2.5 செ.மீட்டர் மழைக்கு பதிலாக 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

கோவை, கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, நீலகிரி, நாமக்கல், காரைக்கால், ்ரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதலாக பெய்துள்ளது. மற்ற சில மாவட்டங்களில் சராசரி மழையும் சில மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது. திருப்பூரில் இந்த சீசனில் மழையே பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்தமழை அளவுவருமாறு:-

வால்பாறை 8 செ.மீ., சின்னகல்லார் 7 செ.மீ., நடுவட்டம் 5 செ.மீ., தேவலா 4 செ.மீ., பெரியார்3 செ.மீ., செங்கோட்டை, மதுராந்தகம், சிதம்பரம் தலா 2 செ.மீ., பொள்ளாச்சி, தாம்பரம், பரங்கிப்பேட்டை, தக்கலை, கெட்டி தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இந்த தகவலை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்