முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திவ்யாவுக்கு பாதுகாப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - தர்மபுரி காதல் மனமகன் இளவரசன் மரணத்தை அடுத்து அவர் காதலித்த திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினால் மனநல மருத்துவர் முலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கலாம் என்றும் ஐகோர்ட் வெவ்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், திவ்யா தனது கணவனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று கூறினார். அவர் இவ்வாறு கூறிய மறுநாளே இளவரசன் இறந்துவிட்டார். திவ்யா தன்னுடன் வாழ மறுத்ததால் மனமுடைந்து இளவரசன் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தர்மபுரி இளவசரன் மரணமடைந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில்  பல தரப்பு வழக்கறிஞர்கள் வெவ்வேறு பெஞ்ச் முன் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒரு மனுவை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் வைகை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு ஆஜராகி கூறியதாவது:-

தர்மபுரியில் வாலிபர் இளவரசனும், திவ்யாவும் காதல் திருமணம் செய்ததை தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தமிழக போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை. எனவேதான் ஒரு இளம் வாலிபர் உயிர் பறிபோய் உள்ளது.

இளம்பெண் திவ்யாவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே இருக்கிறார். எனவே இந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணையில் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை அங்கு வையுங்கள் என்றனர்.

இதை தொடர்ந்து வக்கீல் வைகை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:-

வாலிபர் இளவரசன் இறந்த பிறகு பல மாவட்டங்களில் பதட்டமான சுழ்ைநிலை நிலவுகிறது. தமிழக போலீசார் சரியான நட வடிக்கை எடுக்காததால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலையில் இப்போது மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தர்மபுரி கலவரம் முதல் நடந்த ஒட்டு மொத்த சம்பவங்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்துகொள்ள விரும்பினால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

அதை கேட்ட நீதிபதிகள் தனியாக மனுதாக்கல் செய்யுங்கள். நேறறு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என்றனர். 

இதன் பின் இம்மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் இந்த மனு மீது திங்கட்கிழமை அன்று விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர். 

மேலும் நீதிபதிகள் கூறுகையில் இளவசரன் மரணத்தால் பாதிக்கப்பட்ட திவ்யாவுக்கு அவர் விரும்பினால் மனநல மருத்துவர், மற்றும் அரசு அதிகாரி முன் கவுன்சிலிங் அளிக்கலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது தேவையில்லை என்றும் இது குறித்து அவரிடம் அரசு அதிகாரிகள் கலந்து பேசி உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

திவ்யாவுக்கு பாதுகாப்பு:

இளவரசன் மரணத்தை தொடர்ந்து தர்மபுரியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இளவரசன் இறந்ததையடுத்து, திவ்யாவுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மில்டன் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை  நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்