முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: செசன்சு கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை,செப.21 - முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த ஆண்டு கேப்டன் டி.வி.க்கு அளித்த பேட்டியில், 'மக்கள் வரிப் பணத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளம்பரம் செய்கிறார்' என்று கூறினார்.இதையடுத்து அவர் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு விஜயகாந்த் இதுவரை ஆஜராகவே இல்லை. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று  வந்தது.?, அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜரானார்.பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 30 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜயகாந்த், வளர்ச்சி பிடிக்காமல் ஜெயலலிதா என் மீது  அவதூறு வழக்குகளை தொடுப்பதாக குற்றம் சாட்டினார்.முன்னாதாக விஜயகாந்த் கோர்டில் ஆஜராக வந்த போது அவருடன் ஏரளாமான தொண்டர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்