முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.கணபதி மரணம்

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.27 - சிதம்பரம் புதுப்பேட்டை பிள்ளையார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.கணபதி. முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இவர் நேற்று முன்தினம் இரவு திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1980-84 மற்றும் 1984-87-ல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கே.ஆர். கணபதி சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றார். 

இந்த நிலையில் நேற்று இரவு முன்தினம் 11 மணியளவில் கே.ஆர். கணபதி திடீரென மரணம் அடைந்தார். இறந்து போன கே.ஆர்.கணபதியின் சொந்த ஊர் சிதம்பரம் அருகே உள்ள புளியங்குடி கிராமம் ஆகும்.

இவருக்கு செம்பலவள்ளி என்ற மனைவியும், சுவாமிநாதன், சரவணன், செந்தில், செல்லப்பா ஆகிய 4 மகன்களும் உள்ளனர்.

இதில் சுவாமிநாதன் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவராக உள்ளார். கே.ஆர். கணபதியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்