முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி கைது - எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு

சனிக்கிழமை, 21 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.21 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களை கைது செய்யும்படி டெல்லி சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி ஷைனி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்று உள்ளனர். 

2 ஜிஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியையும் சரத்குமாரையும் கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஷைனி உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டதால்தான் கனிமொழி மற்றும் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு கைதும் செய்யப்பட்டனர். இந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலத்தில்தான் அரசு கட்டுப்பாட்டில் நடக்கும் விசாரணையில் எந்தவித பலனும் ஏற்படுவதில்லை என்று பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து  மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் ஏஜன்சிகளின் விசாரணையால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. விசாரணை சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் இருந்தால்தான் விசாரணையில் நல்ல விளைவுகளும் பலன்களும் ஏற்படும். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், ஆதர்ஷ் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விசாரணையிலும் நீதி கிடைக்க வேண்டும் என்று ஜவதேகர் மேலும் கூறினார். 

கனிமொழியும் சரத்குமாரும் கைது செய்யப்பட்டிருப்பதின்மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியின் நிலை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்