முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு,ஜூலை.3 - இலங்கை கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு அரசால் கலைக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி காரணமாக கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இலங்கை விளையாட்டு அமைச்சகம் கூறியிருப்பதாவது, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால கமிட்டி கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக முன்னாள் தலைவர் உபலி தர்மசாஸா தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த 6 மாதங்களுக்கு செயல்படும் என்று தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டியின் போது நடந்த நிதி மோசடி காரணமாக கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் விளையாட்டு அமைச்சகம் எவ்வித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்