முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சென்னை வருகை

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூலை.13 - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் 19 ம் தேதி சென்னை வரவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த அவர், இந்திய - அமெரிக்க நல்லுறவு குறித்தும் மேம்பாடு குறித்தும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சென்றார். இந்த நிலையில் மீண்டும் அவர் இந்தியாவுக்கு 19 ம் தேதி வருகிறார். அவருடன் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்தியாவுக்கு வருகிறது. தீவிரவாத ஒழிப்பு, அண்டை நாடுகள் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் போது ராணுவ பாதுகாப்புக்காக இரண்டு நாடுகளும் பின்பற்ற வேண்டிய ஒத்துழைப்பு நடவடிக்கைகள், வர்த்தக மேம்பாடு, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விவகாரங்களில் 2 நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய பங்களிப்புகள் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடிக்கும். இவை தவிர 2 நாடுகளுக்கும் எதிர்கொள்ளும் மேலும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும். இந்தியாவுக்கு வருகை தரும் ஹிலாரி சென்னைக்கும் வருகை தருகிறார். அவர் சென்னைக்கு வருவது இதுதான் முதல் தடவை. போக்குவரத்து, வாகன உற்பத்தி, தொழில் முதலீடுகள் ஆகியவற்றில் சென்னை சிறப்பிடம் பிடித்திருப்பதால் அவரது சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தகவலை சென்னை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் அமெரிக்கநிறுவனங்கள் நிறுவியுள்ளதொழிற்சாலைகளும் அவர் பார்வையிடுகிறார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்