எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஜன. - 9 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுத்து இந்திய இறையாண்மைக்கு கேரளம் சவால் விடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தேனி டிரைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சின்னமனூரை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு திருமாவளவன் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய திருமாவளவன், கேரள அரசு மற்றும் அரசியல் கட்சியினர் புதிய அணை கட்ட வேண்டும் என்று பிடிவாதத்தில் உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்க மறுத்து இந்திய இறையாண்மைக்கு கேரளம் சவால் விடுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. உயர்நிலை குழு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கையில் கேரளம் ஈடுபட்டுள்ளது. பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது போல் தமிழகத்தில் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில் இளைஞர்கள் உயிர் தியாகம் செய்யக்கூடாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |