முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் முஸ்லீம்களுக்கு 9 சதவீத உள்ஒதுக்கீடு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புரூக்காபாத், ஜன.11 - உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு 9 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநில சட்ட பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. 

அங்குள்ள பரூக்காபாத் தொகுதியில் மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயீஸ் போட்டியிடுகிறார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சல்மான் குர்ஷித் பேசியதாவது, 

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு ஏற்கனவே எடுத்துள்ளது. இப்போது நான் உங்களுக்கு புதிய வாக்குறுதியை அளிக்கிறேன். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு 9 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்றார். சல்மானின் இந்த வாக்குறுதி காங்கிரசுக்கு முஸ்லீம் மக்களின் வாக்குகளை பெற்றுத் தருமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்