முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ்-திரிணமுல் தொகுதி பங்கீடு இழுபறி

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மார்ச் - 17 - மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது. மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 6 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைத்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்றது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மூத்த கங்கிரஸ் தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜியும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜியும் நேற்றுமுன்தினம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்கள்.

ஆனால் இந்த பேச்சுவாத்தையில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்று  கூறினார்.

ஆனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதை இரு கட்சிகளும் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டில் முகர்ஜியும், பானர்ஜியும் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்கள் . ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்