முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் போக்கை கண்டித்து டெல்லியில் பேரணி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.22 - முதல்வர் ஜெயலலிதா அனுமதி பெற்று மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்து டெல்லியில் பேரணியாக சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுக்க ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட இன மாணவ, மாணவிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை இனி தமிழக அரசே செலுத்திவிடும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், முத்தான அறிவிப்புக்கு ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்தும் பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

சென்னை அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நேற்று ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் டி.ஆர். அன்பழகன் (ஜெயலலிதாவை பேரவை) மாநிலச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பி. பழனியப்பன் (உயர் கல்வித்துறை அமைச்சர்) முன்னிலை வகித்தார். என்.எஸ்.ஏ. இரா. மணிமாறன், எம்.எல்.ஏ.,  வரவேற்றார்.

இ. மதுசூதனன் (அவைத் தலைவர்),   சி.பொன்னையன் (அமைப்புச் செயலாளர்),  டாக்டர் பி.எச்.பாண்டியன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்),  அ.தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்),  விசாலாட்சி நெடுஞ்செழியன் 

அமைப்புச் செயலாளர்,  பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ., பா.வளர்மதி (அமைப்புச் செயலாளர்), சமூக நலத் துறை அமைச்சர் ஆதிராஜாராம்  எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்,   வி.எஸ். சேதுராமன் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்,  ஆர்.கமலக்கண்ணன் 

 (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்), வி.செந்தில்நாதன் (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்), நம்பிராஜ் (எ) நம்பி (ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

ரவிக்குமார் தென் சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை  செயலாளர் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க.மூன்றாம் முறையாக ஜெயலலிதாவின் தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று. ஏழே மாதங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தம் புதுத் திட்டங்களை அறிவித்து. தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ``தளராத நம்பிக்கையுடனும். சிதறாத'' உறுதியுடனும் ஓயாது உழைத்து செயல்பட்டு வரும். நமது போற்றுதலுக்கு உரிய ஜெயலலிதாவை, ஜெயலலிதா பேரவை தலைவணங்கி வாழ்த்துகிறது,

ஜெயலலிதாவின் செயல்களுக்கு உரமூட்டுகின்ற வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும். அம்மா அவர்களின் திட்டங்களின் விளக்கங்களை வீடு. வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் மூலமாகவும். திண்ணைப்பிரச்சாரங்கள் மூலமாகவும் கொண்டு சேர்ப்பது என. இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது,

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில். ஒரு பகுதியில். பசி. பட்டினியால் வாழ்ந்த தமிழர்களின் நிலை கண்டு இரக்கம் கொண்ட. இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பென்னி குவிக் என்பவர். கேரளாவில் வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து. முல்லைப் பெரியாறு அணைகட்டி. அப்பகுதி மக்கள் வளம்பெற வழிவகை செய்தார் என்பதை வரலாறு அறிவிக்கிறது, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகர்க்கு, என்ற வள்ளுவரின் குறள் நெறிக்கு ஒப்ப. நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா. பென்னிகுவிக் தமிழ் மக்களுக்குச் செய்த உதவிக்கு. நன்றி பாராட்டும் வகையில் அவருக்கு மணிமண்டபம் கட்டவும். பென்னிகுவிக் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைத்திடவும் ஆணையிட்டு செயல்படுத்தி வருகிறார்கள், முதல்வர் ஜெயலலிதாவின் குறிப்பறிந்து. நன்றி பாராட்டும் தன்மையை இக்கூட்டம் மனதாரப்பாராட்டி மகிழ்கிறது,

வெள்ளம் வந்தபோது அங்கே வெள்ளம்போல் ஏழை. எளியோர் இல்லங்களை நோக்கி ஓடிவந்து உதவிய புரட்சித்தலைவரைப் போல். தானேபுயல் வருமுன்னே. தானே முன்நின்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து. பின்னர் புயல்வந்தபின்பும். உடனே விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி. நலத்திட்டங்கள் அளித்து. துயருற்ற மக்களின் துயரிலும் பங்குகொண்ட முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை, ஜெயலலிதாவை வணங்கி மகிழ்வதில் இக்கூட்டம் பெருமிதம் கொள்கிறது, அதுமட்டுமின்றி. புயலால் சிதைந்துபோன பகுதிகள். சீரடையும் வரை அந்த பகுதியிலேயே அத்தனை அமைச்சர்களையும் தங்கி பணிசெய்யுமாறு ஆணையிட்டு. போர்க்கால நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை வசதிகளான மின்சாரம். குடிநீர். சுகாதாரம் போன்றவற்றை சில நாட்களிலேயே சீர்செய்து. மக்களின் இயல்பு வாழ்க்கையை சரிசெய்த ஜெயலலிதாவுக்கு இப்பேரவை கூட்டம் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது,

மனிதவள மேம்பாட்டுப்புரட்சி ஏற்படவேண்டுமானால் கல்விப்புரட்சி ஏற்பட்டாக வேண்டும், அப்படிப்பட்ட கல்விப்புரட்சிக்கு வித்திட்டுள்ள ஜெயலலிதாவை, ஜெயலலிதா பேரவை கூட்டம் மனதார வாழ்த்தி வணங்குகிறது,

பெற்றோர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கின்ற வகையிலும் எல்லோரும் கல்வி கற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் மாணவ. மாணவியருக்கு வகுப்பு வாரியாக ஊக்கத்தொகை அளித்து வரும் நமது ஜெயலலிதா தற்போது எண்ணிலடங்கா திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.

தரவாரியாக. புத்தகப்பைகள். கோள வரைபடங்கள். கணித அளவை ​ அளவுகோல் பெட்டிகள். வண்ணக்கலவை பென்சில்கள் இன்ன பிறவற்றை வழங்கி. மாணவ சமுதாயம் அறிவுத்திறன்பெற. அளப்பரிய சாதனை படைத்த சாதனை தலைவி முதல்வரை இப்பேரவைக்கூட்டம் நன்றியோடு பாராட்டுகிறது.

ஆதிதிராவிட மாணவ மாணவிகள் உயர்கல்வியிலும் உயர்வு பெற்றிடல் வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தாயுள்ளம் கொண்ட தங்கத்தாரகை தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தனியார் சுயநிதி கல்லூரியிலும் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்கிற முத்தான அறிவிப்பு ஆதிதிராவிட மாணவர்களின் கல்வித் திறனை முழுமையாக்க உதவுகின்ற சிறப்பான திட்டத்தை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டம் பெரிதும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 

நக்கீரன் கோபால். தான் நடத்திவரும் மஞ்சள் பத்திரிகையான நக்கீரனில். புரட்சித்தலைவரைப் பற்றியும். முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும் பொய்யான தகவல்களை அருவருக்கத்தக்க வகையில் எழுதி. ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி. பின் நீதிமன்ற உத்தரவுப்படி. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும் அதே மஞ்சள் பத்திரிகை நக்கீரனில் வெளியிட்டுள்ளார் என்பதை நாம் அறிவோம், இப்பேரவை ஆலோசனைக்கூட்டம் சார்பாக பணிவான வேண்டுகோள், நக்கீரன் கோபால் செய்த கிரிமினல் குற்றங்கள் கணக்கிலடங்காதது, இனி இதுபோன்ற கிரிமினல்கள் தலை எடுப்பதைத் தடுத்திடவும், தக்க நடவடிக்கை எடுக்குமாறு, இப்பேரவை முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் புனிதமான 64வது பிறந்தநாளை கொண்டாடுகின்ற வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அம்மா பேரவை நிர்வாகிகள் அனைவரும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி. சிறப்பாக செயலாற்றிட. இப்பேரவைக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாள் கொண்டாட இருக்கின்ற இந்த இனிய வேளையில் பாரதப்பிரதமர் ஆகும் வாய்ப்பு கனிந்து வருகிறது, இந்தப் பொன்னான நேரத்தில். கேரளா. ஆந்திரா. கர்நாடகா. மராட்டியம். டெல்லி போன்ற மாநிலங்களிலும் ஜெயலலிதா'' பேரவையை ஜெயலலிதாவின் அனுமதியோடு வலுப்படுத்தி.

மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றிபெற. கடுமையாக உழைத்திட வேண்டுமென இப்பேரவைக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிப்பேச்சுகள். பத்திரிகைகளிலும் வந்தது, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது, டெல்லி சென்றதும். பிரதமரிடம் சொல்லி. புயல் நிவாரண நிதியாக. நிறைய பணம் பெற்றுத் தருகிறோம் என்றனர், டெல்லி சென்றதும். பிரதமர் யார் என்பதே இவர்களுக்கு மறந்து போய்விட்டது போலும், பாவம். பரிதாபம், எனவே இவர்களின் கேலிக்கூத்தை இப்பேரவைக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

விளம்பரத்திற்காக வீண் அரசியல் ஆதாயம் தேடும். தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ். தி,மு,க, மத்திய அமைச்சர்களை இப்பேரவைக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது,

ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன். முதற்கட்டமாக. மின்சார விநியோகத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்தார்கள், ஆனால் 2010 வரை மத்திய தொகுப்பில் இருந்து. நமக்கு கிடைத்து வந்த மின்சாரத்தில். சுமார் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு 2011ல் வேண்டுமென்றே குறைத்துவிட்டது, இதையும் மீறி ஜெயலலிதா மின்சார விநியோகத்தை சரிசெய்து வருகிறார்.

மேலும் நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களை சீர்செய்திட. ஒரு மாநிலத்திற்கு மைய அரசு. விருப்ப நிதி வழங்கிடல் மரபு, ஆனால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாரதப்பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் நிதி வந்தபாடில்லை.

எனவே மத்திய அரசின் மேற்கண்ட மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து. ஜெலலிதாவின் அனுமதி பெற்று. ஜெயலலிதா பேரவை சார்பாக புதுடெல்லி சென்று. குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று. மரியாதைக்குரிய குடியரசுத் தலைவரிடம் நியாயமனு கொடுத்து. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவது என இப்பேரவைக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது. மேற்கண்ட தீர்மானங்கல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்