முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா!

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப் 24:

அரபு நாடுகள் உதவியுடன் சிரியாவி்ல் அமெரிக்கா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதில் ஜோர்பான், கத்தார், பாஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஈராக் நாட்டில் உள்நாட்டு போர் தீவரமடைந்து வருகிறது. சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் ஈராக் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக வைத்து அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோரை கொன்றுள்ளனர். அண்டை நாடான சிரியாவிலும் ஐஎஸ்ஐ தீவிரவாத பிரிவு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈராக் மீது சமீப காலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு வாரங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து வட ஈராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்கு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் நாடும் பங்கெடுத்து கொண்டது. இதன் மூலம் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது. ஐக்கிய அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தருவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையி்ல் சிரியா நாட்டில் உள்ள ரக்கா நகர் மீது நேற்று முன்தினம் அமெரிக்கா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவுக்கு உதவியாக ஜோர்டான், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலில் பங்கேற்றுள்ளன. அப்போது போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்குகள், புகலிடங்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கட்டிடங்கள் மீது குண்டுகள் பொழிந்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. அதற்கு பின் மேலும் சில மணி நேரங்கள் இடைவெளிக்கு பின் தாக்குதல் நடந்தது. பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து சிரியா அதிபர் ஹரி அல் பஹ்ராவுக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை. சிரியா  எல்லையோர பகுதியில் குர்திஷ் இனத்தினர் மீது ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வந்தனர். அதனை தடுத்து நிறுத்த அமெரிக்காவுக்கு சிரியாவின் எதிர்க்கட்சிகள் கூட்டணி சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago