எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். மேலும் முகவர்கள் செல்போன் கொண்டுவர அனமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னணு பரிமாற்றம்...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
நடந்து முடிந்த 38லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி துவங்கப்படும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளின் விரைவு மதிப்பீட்டுக் குறியீடு சரிபார்ப்பு (Qr-code) முடிந்தவுடன் அவை அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேசைக்கு அனுப்பப்படும்.
தபால் வாக்குகள்...
ஒவ்வொரு லோக்சபா தொகுதியும் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8. மணியளவில் துவங்கும். இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குப் பிறகு துவங்கும்.
ஒப்புகை சீட்டுகள்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் இயங்காத நிலையில், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கை பணி தொடரும். கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மற்ற மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிவுற்ற பின்னர் அக்கட்டுப்பாட்டு கருவியின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
சரிபார்க்கும் பணி...
இந்தியத் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி பின்வரும் முறையில் நடைபெறும்: மின்னணு வாக்குப் பதிவுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளைப் பெறமுடியாத சூழல் ஏற்படும்போது;
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால்; கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபடும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலாயின், கட்டுப்பாட்டுக் கருவி குறிப்பிட்ட ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும்.
குலுக்கல் முறையில்...
மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியில் எடுக்காமல் இருந்தால், வாக்காளர் வாரியாக சான்றொப்பமிட்ட மாதிரி வாக்குப் பதிவின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56-க்கு உட்பட்டு தேர்தல் அலுவலரால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால்; சரிபார்ப்புக்காக தோராயமாக தெரிந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும்.
எழுத்து பூர்வமாக...
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயந்திரங்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56க்குட்பட்டு நடைபெறும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் அட்டை அளவிலுள்ள வெள்ளை நிற காகித அட்டைகள் குலுக்கலுக்கான தேர்வுமுறைக்குப் பயன்படுத்தப்படும். சட்டசபை தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற காகித அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். மேலே பத்தி 7-ல் (அ) முதல் (ஈ) வரையுள்ள காரணங்களுக்கான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணிக்குரிய இயந்திரங்கள் குறித்த விவரம் குலுக்கல் முறையில் நடத்தப்படும் அட்டைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
காகித அட்டைகள்...
சட்டசபை தொகுதி / லோக்சபாதொகுதி எண் மற்றும் பெயர், வாக்கு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் 1 அங்குல நீளம் அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்படும். இந்த காகித அட்டைகள் நான்கு மடிப்புகளாக மடிக்கப்படுவதால் உள்ளே வாக்குச்சாவடி எண் வெளியில் தெரியாது. ஒவ்வொரு காகித அட்டையையும் மடித்து பெட்டிக்குள் செலுத்துவதற்கு முன் வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் காண்பிக்கப்படும் தேர்தல் அலுவலரால் 5 காகித அட்டைகளைத் தெரிவு செய்வதற்கு முன் அதற்கான பெட்டி நன்கு குலுக்கப்படும்.
ஒப்புகைச் சீட்டு...
வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமைக்கப்பட்ட "வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுவதோடு மேலே பத்தி 8-ல் ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணிக்கான (அ) முதல் (ஈ) குறிக்கப்பட்டுள்ள பணிகள் முதலில் நடைபெறும். அதனையொட்டி மற்ற 5 வாக்குச் சாவடிகளுக்கான ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
பெங்களூரு சாலைகளில் பள்ளங்கள்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து
20 Sep 2025பெங்களூரு, பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் சீரமைப்பு ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
20 Sep 2025திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.