Idhayam Matrimony

கொள்ளையர்களை விரட்டிய வயதான தம்பதி: விஜய், அஜித் பட தலைப்புடன் ஹர்பஜன் சிங் தமிழில் அசத்தல் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்ட வயதான தம்பதியை பாராட்டி ஹர்பஜன் சிங் அசத்தலாக ட்வீட் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து நிலைகுலைய செய்தனர்.

அவரிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். இதனை பார்த்த அவரது மனைவி செந்தாமரை வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையனின் மீது எடுத்து வீசினார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த பொருட்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினர்.

சண்முகவேல் மற்றும் அவரது மனைவி கொள்ளையர்களை விரட்டியடிக்கும் காட்சி அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியினரின் வீரத்தை பாராட்டினர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனக்குரிய சிறப்பான வகையில் தமிழில் அசத்தலாக பாராட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து