எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக்க வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது:-
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் பங்குபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த டிசம்பரில் வங்கியின் நிர்வாக இயக்குனர் நரேந்திரா என்னை சந்தித்தபோது தமிழ்நாட்டின் இந்த வங்கி 854 கிளைகளுடன் இணைந்த பணியை மேற்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். நரேந்திராவுக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு சவாலாக தமிழ்நாட்டில் ஆயிரமாவது கிளையை தொடங்க வேண்டும் என்று நான் கோரினேன். இவ்வளவு பெரிய அளவில் அவர்கள் செயல்படுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது, குறைந்த காலமான 6 மாதத்திலேயே அவர்கள் தமிழ்நாட்டில் 150 கிளைகளை தொடங்கிவிட்டார்கள். இந்த சிறப்பான சாதனைக்காக நரேந்திராவையும் அவரது குழுவினரையும் நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
உள்நாட்டு வங்கி முறையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உள்ளது. கடன் அளித்தல், வட்டி விகிதத்தை நிர்ணயத்தல் மற்றும் சரியான கட்டண செலுத்தும் முறை ஆகிய வங்கி பணிகளை தமிழ்நாட்டின் பழம்பெரும் வணிக சமுதாயம் நல்ல முறையில் அறிந்திருந்தது. வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி 1937-ம் ஆண்டு பழம் பெரும் மரபுகளின் அடிப்படையில் உருவானது. 1930 ஆம் ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக முக்கிய தானியங்களில் விலை பிரச்சனை உருவானது. அந்த நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பராமரிப்பு உறுதி தன்மை, ரூபாய் நோட்டு மற்றும் கடன் வழங்கும் முறையை பாதுகாக்கவும், 1935 ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது. நிறுவன ரீதியான வங்கி முறையில் இந்த சகாப்தத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி முதல் மிகவும் பெரும் வங்கியாக நிர்வாகத்தை பெற்றுள்ளது. எம்.சிதம்பரம் செட்டியார் 30 வயதாக இருந்தபோது இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இதனை நாம் மிகவும் பெருமையுடனும், நன்றியுடனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரால் தொடங்கப்பட்ட சிறிய வங்கி, மிகப்பெரிய உலகளாவிய அமைப்பாகவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து முன்னோடி வங்கியாக திகழ்கிறது.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி எனக்கு புதியது அல்ல. அது தேசியமயம் ஆக்கப்பட்டதற்கு. முன்னும் பின்னும் இருந்து அதனை பார்த்து வருகிறேன். இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நானும் ஒருவர். மிகப்பெரிய சேவை இணைப்புக்காகவும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருவதால் தமிழகத்தில் அது முக்கிய இடத்தை பெற்று வருகிறது. ஓரத்தில் உள்ள கிராமங்கள், மகளிர் குழுக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகை உட்பட மாநிலத்தில் முன்னணி நடவடிக்கைகளை இந்த வங்கி எடுத்த வருகிறது என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீலகிரி ஆதிவாசி மக்களுக்காக இந்த வங்கி நிதி அடிப்படையில் எடுத்த முன் முயற்சிகளுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளது. 2008-ல் உலகளாவிய பொருளாதார சிக்கலினால் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டபோது, சில்லறை வங்கியியல் திட்டம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த வங்கி மீண்டும் தன்னை உருவாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கியை போல, உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பான நிறுவனங்களின் தமிழ்நாட்டில் நிதிமுறையை உண்மையில் மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர் தரும் இரத்தம் போன்றது. தன்னிறைவுக்கும் முக்கியமானது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது. சேமிப்பு, வைப்புத் தொகை, தொகை செலுத்தும் சேவைகள் மற்றும் கடன் போன்ற நிதி சேவைகளில் மிகப்பெரிய எண்ணிகையிலான குடும்பங்கள் இணைவதை அதிகரிக்கும் வகையில் வங்கி பணிகள் உள்ளன. மேலும் மேலும் அதிக மக்களுக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளது. மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் தொலைபேசி போல பொது மக்கள் சேவையில் வங்கி பணியும் மிக முக்கியமாக வளர்ந்து வருகிறது.
பொருளாதார மேம்பாட்டை பொருத்தவரையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சேமிப்பை உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன. உற்பத்தி இல்லாத துறைகளில் முதலீடு செய்வது இல்லை. தற்போது இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பில் 50 சதவிதம் நிதி சொத்துக்களுக்காகவும், மற்றவை நிலையான சொத்துகளுக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் இந்த சேமிப்புகளில் வணிக வங்கிகளில் 42 சதவிகிதமும், வங்கி சேமிப்புகளில் 61.2 சதவிதமும் செலுத்தப்படுகின்றன. 2010-11 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது. நிதி சேமிப்புகளில் பங்கு பெறுவதிலும், வணிக வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை இது காட்டுகிறது. உலகிலுள்ள 2.5 மில்லியன் வங்கி கணக்கு வைத்தில்லாத மக்கள் தொகையின் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி குறியீட்டில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையானதாக வளர வேண்டும் என்ற எனது கனவுகள் அடிப்படையில் நிதி துறையிலும் தமிழகம் முதலாவது இடத்தை பெற வங்கிகள் அனைத்தும் தன்னுடைய நடவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசி மூலம் வங்கியில் பதிவு செய்தல் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் போன்றவை வளர்ந்தும் வரும் நேரத்தில் தொழில்நுட்ப அடிப்படையில் வங்கி பணிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. வங்கிகள் தொழில்நுட்பத்தை வளர்த்து அதில் அதிக மக்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
அரசின் வரிகளையும் நீண்டகாலமாக வசூலித்து வருகின்றன. தற்போது சம்பளங்களையும் வங்கிகளின் மூலமாக அரசு அளித்து வருகிறது. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களையும் வங்கிகளின் மூலமாகவே விநியோக்கிறோம். இந்த நடவடிக்கை இப்போது ஆரம்பித்துள்ளது. இதை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுப்பான ஓய்வூதியம், கூலி, கல்வி உதவி தொகைகள் ஆகியவை மிகப்பெரிய வங்கி வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளும், அரசும் தன்னுடைய உறவில் பங்கெடுத்து கொள்கின்றன.
என்னுடைய 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் ஒருங்கிணைந்த நிதிமுறை மற்றும் மனிதவள ஆதார பராமரிப்பு முறை திட்டத்தை நான் அறிவித்தேன். இந்த அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வங்கிகள் முழுமையாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மிகப்பெரும் அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. வறுமையை ஒழிப்பதில் இத்தகைய பணிகளை சிறப்பாக வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
2012-13-ம் ஆண்டில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நகர்ப்புற ஆதாரத்திட்டதை அறிவித்தேன். வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையை பொறுத்தவரையில் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்துறைக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்வரவேண்டும். இதற்கான குறியீட்டு தொகை 48,584 கோடியாகும். இவற்றின் தவணை முறைக்கடன் 17,010 கோடியாகும்.
2011-12-ல் இதற்கான குறியீடு 31,017 கோடியாகும். இதில் தவணைமுறைக்கடன் 7,518 கோடியாகும். இந்த குறியீடு மிஞ்சப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.
தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சமுகம் மேம்பாட்டின் சகாப்பதத்தில் முக்கிய கட்டத்தில் உள்ளது. என்னுடைய தமிழ்நாடு 2023 தொலைநோக்கு திட்டம் வளமான தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய தொலைநோக்கு பார்வையில் அடிப்படையாகக் கொண்டதாகும். அடுத்த 11 ஆண்டுகளில் இதற்கு 15 லட்சம் கோடி தேவைப்படும். 2023 தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி முதலாவதாக முன்வந்ததற்காக நான் பாராட்டுகிறேன்.
இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி தன்னுடைய சவால்களை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். தன்னுடைய பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும். மேலும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வங்கி இணைப்பை பெற்று இந்தியாவிலேயே நிதி துறையில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க மற்ற வங்கிகளை இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பணிகள் ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி வருங்காலத்தில் சிறந்த முறையில் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


