எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ண கோலங்களிட்டு வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களை கட்டி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து குழந்தைகளை கண்ணனை போல் அலங்கரித்து குழந்தைகளின் பாத சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து அந்த குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும் அற செயல்களை மென்மேலும் வளர்த்து தீமைகள் அகற்றி நன்மைகள் பெருக செய்து உலகில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினை தெரிவித்து அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் மீண்டும் ஒரு முறை எங்களது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |