எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத் துரோக குற்றமாக கருதி அவர் இந்த ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். நாடு கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தென்கொரிய ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட பட்டினியால் ஏற்படும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சோங்ஜின் நகரம் மற்றும் கியோங்சாங் கவுண்டியில் மட்டும் இந்த ஆண்டு 35 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
வடகொரியாவில் கடந்த ஆண்டை விட பொருளாதார நெருக்கடி தற்போது மோசமடைந்ததை. மக்கள் படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் தீர்க்க முடியாமல் உள்நாட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாக தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். இதனால் தான் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


