முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்கமருந்து தடை விதி மீறல் பஜ்ரங் புனியா மீண்டும் சஸ்பெண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      விளையாட்டு
Bajrang-Punia 2024-05-04

Source: provided

புதுடெல்லி : ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து தடை விதியை மீறியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வெண்கலம் வென்ற....

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்த நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மூலமாக (NADA) முறையான குற்றச்சாட்டு நோட்டீஸ் பெற்றுள்ளார். இதன் காரணமாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மூலமாக மீண்டும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொடுக்க மறுப்பு... 

கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி சோனேபட்டில் நடைபெற்ற தேர்வு சோதனையின் போது ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி அவரை இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் இடைநீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இதையடுத்து ஒழுங்குமுறை ஊக்கமருந்து எதிர்ப்பு குழுவானது தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் குற்றச்சாட்டு அறிவிப்பை வெளியிடும் வரையில் பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது.

ஜூலை 11 வரை...

இந்த நிலையில் தான் தேசிய ஊக்கமருந்து தடுப்பு பிரிவு மீண்டும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், இது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள், 2021 இன் பிரிவு 2.3 ஐ மீறியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு மீதான விசாரனைக்கு அல்லது குற்றசாட்டை ஏற்பதற்கு வரும் ஜூலை 11 ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து