முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா ரசிகருடன் நடிகர் விஜய் சந்திப்பு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
kerala 2025-02-08

Source: provided

சென்னை: கேரளாவில் இருந்து வந்த ரசிகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினர்.

ஜனவரி 1-ம் தேதி கேரளாவில் இருந்து உன்னி கண்ணன் என்ற விஜய் ரசிகர், அவரை சந்திப்பதற்காக தமிழகத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார். தினமும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தற்போது எங்கு இருக்கிறேன், என்ன சாப்பிட்டேன் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்துக் கொண்டே தமிழகத்துக்கு நடந்து வந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. கழுத்தில் விஜய் படத்தை தொங்கவிட்டப்படி, கைகளிலும் விஜய்யின் புகைப்படங்களை வைத்துக் கொண்டே நடந்து வந்தார். உன்னி கண்ணனின் வீடியோ பதிவுகள் விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரோ தனது மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அவரது நடைபயணம் எதிர்பார்த்ததை விட தாமதமானது. இதனால் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் விஜய்.

உன்னி கண்ணன் சென்னை வந்தவுடன் அவரை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சந்தித்துள்ளார் நடிகர் விஜய். ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் தொலைபேசிக்கு அனுமதியில்லை என்பதால், விஜய் - உன்னி கண்ணன் சந்திப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களில் அனுப்பி வைப்பதாக விஜய் தரப்பு தெரிவித்திருக்கிறது. இதனை உன்னி கண்ணன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் பத்து நிமிடங்களுக்கு மேல் விஜய்யை அவரது கேராவேனில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் புகைப்படம் மற்றும் வீடியோ கிடைத்தவுடன் பதிவிடுவதாகவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து