முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 6 மே 2025      தமிழகம்

தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். 

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நேற்று மே 6 முதல் வரும் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மே 9 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதனால் மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா வரும் மே 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டும் வரும் மே 12 ஆம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இரு விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் அப்பகுதியில் மிகவும் பிரபலமாகவே பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து