முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் அதிவேக இணையதள வசதி துவக்கம்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
Internet 2023 06 30

Source: provided

சென்னை : ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி தமிழகத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

கிராமப்புறங்களில்  அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் இந்த திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் 'ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணைய தள சேவை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கும், அதனைத்தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில் இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. அதில் அதற்கேற்ற வகையில் வேகம் இருக்கும். அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. ஆனால் இவற்றில் மாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து