முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது: ஆர்.சி.பி. கேப்டன்

சனிக்கிழமை, 24 மே 2025      விளையாட்டு
RCB 2024-03-20

Source: provided

லக்னோ : ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது நல்லது. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்.சி.பி. கேப்டன் ஜிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

ரஜத் படிதார் காயம்... 

ஐ.பி.எல். தொடரில்நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அதனால் கேப்டன் பொறுப்பு ஜிதேஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

ஐதராபாத் வெற்றி...

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோற்றது நல்லது...

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய பெங்களூரு கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறியதாவது, 20-30 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். நாங்கள் தீவிரமாக செயல்படவில்லை . ஆனால் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் .நேர்மறையான விஷயங்கள் என்னவென்றால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறோம்.வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நல்ல முறையில் மீண்டு வருவோம்.என தெரிவித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து