முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
Air-India 1

Source: provided

மும்பை : நடுவானில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.

தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர். விமானம் மராட்டிய வான்பரப்பில் நுழைந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால், துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை அவசரமாக புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார். 

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்லவில்லை. இதையடுத்து, டெல்லிக்கு டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி ஒப்படைக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து