முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் புது பைக்குகளுடன் 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்: மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். வசதி இல்லை. ஏ.பி.எஸ். தொழில்நுட்பம் இருந்தால், திடீரென பிரேக்  பிடிக்கும் போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துகள் குறையும் என்பதால், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, 125 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களில் மட்டுமே ஏ.பி.எஸ். வசதி கட்டாயமாக உள்ளது. இதேபோல், தற்போது இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், வரும் ஜனவரி 2026 முதல், இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன.

 தற்போது, வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிவது போக்குவரத்து விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, மத்திய அரசு மேற்கண்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. அரசிதழில் அறிவிக்கை வெளியானவுடன், இந்த விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து