முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணத்தை தராமல் இழுத்தடிப்பதா? - தமிழக அரசுக்கு த.வெ.க. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Vijay 2024-11-02

Source: provided

சென்னை : ரூ. 811 கோடிக்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தை தராமல் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என  ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக த.வெ.க. தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு,  விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து. தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ரூ. 811 கோடிக்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசை வெளியில் எதிர்ப்பது போல் கபட நாடகம் நடத்தும் தி.மு.க. அரசு, அவர்கள் உருவாக்கிய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம்  என்ற நிறுவனத்துக்கு நெல்லை கொள்முதல் செய்யும் அனுமதியை வழங்கியதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

எதிர்க் கட்சியாக இருந்த நேரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ள பி.ஆர்.பாண்டியன் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் ஓடிவந்து குரல் கொடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதல்வர், இன்று அதே பி.ஆர்.பாண்டியன்   தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் செய்கிறார்.  அடக்குமுறையைக் காட்டி விவசாயிகளை ஒடுக்க நினைத்தால், டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் எப்படி வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து ஸ்தம்பிக்க வைத்தார்களோ... அதே நிலை தமிழகத்திலும் நடைபெறும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து