முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      உலகம்
Axiom-4-2025-06-25

வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் உள்ளது. வருகிற 2027-ம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.அவர்களுக்காக சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்த இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சி குழுவுடன் செல்ல இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷூ சுக்லாவை தேர்வு செய்தது. இதன்படி, நேற்று முன்தினம் இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்களும் சென்றனர். 

இந்த விண்கலன் நேற்று மாலை 4.30 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது. இந்த நிலையில், முன்னதாக சர்வதேச விண்வெளி மைய வட்டப்பாதையில் விண்கலன் நுழைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்கலன் மணிக்கு 26,447 கி.மீ. வேகத்தில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து