முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      தமிழகம்
Aarmy 2025-03-31

தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது. 

தர்மபுரியில் நேற்று காலை 7 மணியளவில் இந்திய விமானப்படையின் விமானங்கள் தாழ்வான உயரத்தில் பறந்து சென்றன. சுமார் 4 மணி நேரமாக 2 விமானப்படை விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில், இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில், இந்த விமானங்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைந்திருக்கும் எலங்கா விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனுப்பப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சியின்போது பாதுகாப்பு கருதி கூடுதல் விமானத்தை அனுப்பும் வழக்கம் உள்ளதாகவும், இதன் காரணமாகவே தர்மபுரியில் 2 விமானப்படை விமானங்கள் பறந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் தாழ்வான உயரத்தில் 2 விமானங்கள் பறந்து சென்ற சம்பவம் தர்மபுரி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து