முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை  அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கு அவரது கட்சிக்காரர் தொடர்பான வழக்கு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ரத்து செய்ய அவர் தாக்கல் செய்த மனுவை குஜராத் ஐகோர்ட் ஏற்கவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து, வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 

அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:- வக்கீல் தொழில் என்பது நீதி நிர்வாக நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதி. எனவே, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப விசாரணை அமைப்புகளையும், போலீசையும் அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும். மேலும், நீதி நிர்வாகத்தின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். போலீசாரின் நோட்டீசை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து