முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான பொருட்களின் விலை பட்டியல்: அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, கட்டுமான பொருட்களின் விலை பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராம், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழ்நாடு அரசின் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கான 2025-26 ஆம் ஆண்டுக்கான கட்டுமான பொருள்களின் விலை பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடவில்லை.  இதனால் ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடக் கோரி நிதித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட செயலாளருக்கு மனு அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி ஏப்ரல் மாதம் வெளியிடக்கூடிய விலை நிர்ணய பட்டியலை ஏன் இன்னும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்த புள்ளி கேட்க முடியும்? மேலும் விலைவாசிகளும் உயர்ந்து உள்ளது என தெரிவித்த நீதிபதி, ஒப்பந்ததாரர்களின் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து