முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்: டிரம்ப்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      உலகம்
Trump

Source: provided

தி ஹேக்: நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவை பகிரங்கமாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது; உக்ரைன் மீதான போருக்குப் பிறகு, பிற நாடுகளையும் ஆக்கிரமிக்க ரஷ்ய அதிபர் புடின் நினைப்பது போல் தெரிகிறது. 'நேட்டோ' அமைப்பின் மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தல்களில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது. உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகளை வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். புடின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என உணர்கிறேன். உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடின் முன் வர வேண்டும். இந்தப் போரை நிறுத்த இது சரியான நேரம். நான் புடினுடன் பேசி முடிவு காண்பேன். இது எதிர்பார்த்ததை விட சிக்கலானதாக உள்ளது, எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து