முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
Arun

Source: provided

சென்னை :  தனியார் பால் நிறுவனத்தில் கரு​வூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், "மேலாளர் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது.

காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் தனியார் பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளர்​மோசடி செய்ததாக புகார் அளித்தார். அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கிகணக்கு பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தினோம். அந்தப் புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது.

கோடி கணக்கில்முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலாளர்​ அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியராஜனுக்கு நான் தான் விடுப்பு கொடுத்து அனுப்பினேன்” என்றார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து